பிரான்சின் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று!

பிரான்சின் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று!

பிரான்சின் சாள்-து-கோல் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று தபாராளுமன்றத்தில் வைத்து இராணுவ அமைச்சர் Florence Parly இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

கப்பலில் இருந்த மொத்தம் 2010 பேருக்கு கொரோனா தொற்று சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்பின்னர் 1,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 545 பேருக்கு கொரோனாவுக்கான அறிகுறி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  Toulon துறைமுகத்தை குறித்த கப்பல் வந்தடைந்ததில் இருந்து கப்பலில் இருந்த அனைவரையும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள்  Toulon மற்றும் Hyères bases ஆகிய நகரங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments