வியக்க வைக்கும் 2000 வருடங்களுக்கு முந்தைய தொழிநுட்பம்!

வியக்க வைக்கும் 2000 வருடங்களுக்கு முந்தைய தொழிநுட்பம்!

2000 வருடங்களுக்கும் அதிகமான பழமை வாய்ந்தது எனக்கருதப்படும் தொழிநுட்பம், ஆய்வாளர்களை வியக்க வைத்திருக்கிறது.

மத்தியதரைக்கடலின் ஒரு பகுதிக்கும், கிரேக்கம் அமைந்துள்ள பகுதிக்கும் அருகாமையில் இருக்கும் கடலின் ஆழத்தில் புதைந்துபோனதாக கருதப்படும் கப்பலொன்றின் சிதைவுகளும், கப்பலில் கொண்டுசெல்லப்பட்டதாக நம்பப்படும் பொருட்கள் சிலவும், 1901 ஆம் ஆண்டளவில் சுழியோடிகளால் மீட்கப்பட்டிருந்ததாகவும், கப்பலில் கொண்டுசெல்லப்பட்டதாக நம்பப்படும் பொருட்கள், கிரீஸ் நாட்டிலிருந்த்து ரோமர்களால் கொள்ளையடித்து சொல்லப்பட்டவை எனவும் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், அப்பொருட்களுக்கிடையில் கிடைத்திருக்கும் வெண்கலத்திலானால பொறியியல் பாகங்களைக்கொண்ட பெட்டி ஆச்சரியப்பட வைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கி.மு. 80 மற்றும் 87 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் குறித்த கப்பல் கடலில் அமிழ்ந்துபோனதாக கருதும் ஆய்வாளர்கள், எனினும் தற்போது ஆச்சரியபடவைக்கும் குறித்த வெண்கலத்தாலான பொறியியல் பெட்டி, அக்காலத்துக்கும் முன்னதான பழமை வாய்ந்ததாக இருக்கலாமெனவும் கருதுகின்றனர்.

குறித்த வெண்கல பெட்டி பற்களைக்கொண்ட சில்லையும், இக்காலத்தில் “கியர்” என அறியப்படும் சாதனங்களையும் உள்ளடக்கியதாக இருப்பது, ஆய்வாளர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், உலகின் மிகப்பழமையான “Analog” கணினி என இவ்வெண்கலத்தாலான பொறியியல் பெட்டியை ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள்.

“University College London” சார்பில், தற்காலத்தைய ஊடுகதிர் மற்றும் “3D” ஆய்வு தொழிநுட்பங்களை பயன்படுத்தி குறித்த வெண்கல பொறியியல் பெட்டி ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது, சுமார் 1500 – 2000 வருடங்களுக்கு முந்தைய பிரபஞ்ச அறிவியல் மூலம், சந்திர கட்டங்கள் (Luner Phases), நாள், வாரம், மாதம் போன்றவற்றை கணக்கிட்டுக்கொள்ளும் நோக்கில் மிகச்சிக்கலான தொழிநுட்பத்தையும், அறிவியலையும் கொண்டு அப்பெட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டிருக்கிறது.

வியக்க வைக்கும் 2000 வருடங்களுக்கு முந்தைய தொழிநுட்பம்! 1
2000 வருடங்களுக்கு முந்தியது எனக்கருதப்படும் பொறியியல் வெண்கலப்பெட்டியின் மாதிரி உருவாக்கம்

இவ்வெண்கலைப்பெட்டி உருவாக்கப்பட்டதாக கணக்கிடப்படும் காலப்பகுதியில், பூமியானது வான் வெளியின் / ஏனைய கோள்களின் நடுநாயகமாக இருந்ததென நம்பப்பட்ட காலப்பகுதி என்பதால், குறித்த வெண்கலப்பெட்டியானது வான்வெளி அறிவியல் தொடர்பான மிகச்சரியான தகவல்களை வழங்கியிருக்குமா என்பது சந்தேகமே எனவும் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், குறித்த பெட்டி, பரீட்ச்சார்த்தமான முயற்சிகளுக்காக உருவாக்கப்பட்டதா அல்லது, வான்வெளி அறிவியலுக்காக பாவனையில் இருந்ததா என்பதை அறிய முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

மூலம்:

https://www.nrk.no/urix/mystisk-maskin-fra-antikken-forbloffer-forskerne_-_-teknologien-er-1500-ar-forut-for-sin-tid-1.15420316

பகிர்ந்துகொள்ள