வியட்நாமில் மிக ஆபத்தான புதியவகை வைரஸ்!

You are currently viewing வியட்நாமில் மிக ஆபத்தான புதியவகை வைரஸ்!

“கொரோனா” வைரஸின், இந்திய மற்றும் பிரித்தானிய வகைகளை விடவும் மிகவும் ஆபத்தான, புதியவகை வைரஸ் வியட்நாமில் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவ்வகையான வைரஸ், காற்றில் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதோடு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருக்கும் வியட்நாமின் சுகாதாரத்துறை அமைச்சர் “Nguyen Thanh Long”, இந்திய மற்றும் பிரித்தானிய வகை வரசுக்களின் கலவையாக உருமாறியுள்ள புதியவகை வைரஸ் மிக வேகமாக உருக்கொள்ளும் தன்மையுடையது எனவும், இவ்வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமங்களை வியட்நாம் எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments