விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த யானை உயிரிழந்துள்ளது!

விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த யானை உயிரிழந்துள்ளது!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் விவசாயிகள் எரிஞ்ச காட்டுப்பகுதியில் வயல்செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாகா காலில் பாதிக்கப்பட்ட காட்டு யானை ஒன்று விவசாய நிலத்திற்குள் நின்று நெற்பயிர்களை நாசம் செய்து அழித்து வந்துள்ளது.
சுமார் 12 அடி உயரம் கொண்ட யானையின் பின்னங்கல்களில் ஒன்றில் கம்பி இறுகியதனால் நடக்கமுடியாத இயலாத நிலையில் காலை இழுத்து இழுத்து சென்று  வயல் நிலங்களை அழித்துள்ளதுடன் அதனை துரத்தும் விவசாயிகளையும் துரத்தி தாக்க முற்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகளின் நெற்செய்கையில் நூறு ஏக்கர் நெற்செய்கையினை குறித்த யானை நாசம் செய்துள்ளது.
இன்னிலையில் கடந்த 11.12.2020 அன்று யானைகுறித்து விவசாயிகள் விவசாய போதனாசிரியர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தி யானைக்கு சிகிச்சையளித்துள்ளார்கள்.
இன்னிலையில் யானை வயல் நிலத்திற்கு அருகில் உள்ள பற்றைக்காட்டில் நின்றவேளை 12.12.2020 அன்று இரவு தண்ணீர் பகுதிக்கு வந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. 
யானையின் உயிரிழப்பு தொடர்பில் 13.12.2020 அன்று  வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிரேத பரிசோதனையினை  மேற்கொண்டுள்ளார்கள்
உயிரிழந்த யானையினை கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலத்தினர் புதைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளார்கள்
எரிஞ்சகாட்டு வயல்பகுதிக்கு உழவு இயந்திரம்கூட செல்லமுடியத நிலையில் வீதி காணப்படுவதால் யானையினை புதைப்பது எவ்வாறு என்று தெரியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
நாள்தோறும் கொக்குத்தொடுவாய் விவசாயிகள் காட்டுயானையின் தொல்லைக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள் யானைவேலி இல்லாத நிலையில் காலபோக நெற்செய்கையினை மேற்காண்டும் யானையினால் பாரியஅழிவினை ஆண்டுதோறும் எதிர்கொண்டுவருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுயானைகளுக்கு சரியான கண்காணிப்பு உணவுகள் இல்லாத நிலை தொடர்வதால் யானைகள் உயிரிழப்பதுடன் யானைக்கும் விவசாயிகளுக்கம் இடையிலான மோதல் தன்மை அதிகரித்துள்ள நிலையில் ஆண்டுதோறும் பல யானைகள் உயிரிழந்து வருகின்றன.முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவு காடுகள் காணப்படுவதாக வனவளத்திணைக்களம் தெரிவித்துள்ளபோதும் காடுகளில் போhதி உணவுகள் இல்லாத நிலையில் காட்டுயானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவாசய செய்கையினை அழித்து வருகின்றன.
யானைவேலி அமைத்து தருமாறு எல்லைப்புற விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் நிறைவேறாத நிலையில் காட்டுயானைகளின் தொல்லை தாங்கமுடியாத நிலையில் யானைகளை விரட்டுவதற்காக வைக்கப்படும் பெறிகளில் யானைகள் சிக்கி உயிரிழக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெங்காய வெடி எனப்படும் வெடியினை வைப்த்து அதனால் பாதிக்கப்பட்ட பல யானைகள் உயிரிழந்துள்மை குறிப்பிடத்தக்கது.
காட்டு உயிரினங்களை பாதுகாக்கும் வனஜீவராசிகள் திணைக்களம் யானைகள் மீது அக்கறை செலுத்தும் அதேவேளை விவசாயிகளின் நிலையினையும் கருத்தில்கொண்டு யானைகளில் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்

பகிர்ந்துகொள்ள