வீட்டில் சிலந்தியா; சந்தோஷப்படுங்கள்! நோர்வே ஆய்வாளர் கருத்து!!

வீட்டில் சிலந்தியா; சந்தோஷப்படுங்கள்! நோர்வே ஆய்வாளர் கருத்து!!

வீடுகளில் சிலந்திப்பூச்சிகள் இருப்பது நல்லதென, உயிரியிலலாளரும், குறிப்பாக சிலந்திப்பூச்சிகள் தொடர்பில் விசேட பாண்டித்தியம் பெற்றவருமான, நோர்வே ஆய்வாளரான “Petter Jordan” தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் பதிவு செய்யப்பட்ட 48.000 வகை சிலந்திகள் இருப்பதாக தெரிவிக்கும் குறித்த நோர்வே ஆய்வாளர், இவற்றில் 630 வகையானவை நோர்வேயில் இருப்பதாகவும், இவற்றில் எவையும் மனிதர்களுக்கு ஆபத்தானவையாக இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

வீட்டில் சிலந்தியா; சந்தோஷப்படுங்கள்! நோர்வே ஆய்வாளர் கருத்து!! 1
உயிரியல் ஆய்வாளர் “Petter Jordan”

சாதாரணமாக வீடுகளில் இருக்கக்கூடிய சிறியவகை பூச்சிகள் தொடர்பில் ஆய்வுகளை செய்துவரும் இவர், குறிப்பாக, “Eratigena atrica” என்ற, வீடுகளில் சாதாரணமாக இருக்கக்கூடிய சிலந்திகள் பற்றி தெரிவிக்கையில், இவ்வகை சிலந்திகள் பற்றி பயம் கொள்ள தேவையில்லை என்றும், சுமார் 8 இலிருந்து 10 செ.மி. நீளமே இருக்கக்கூடிய இவ்வகை சிலந்திகள் மிகவும் வேகமாக அசையக்கூடியவை என்றும், வீடுகளில் காணப்படும் விரும்பத்தகாத அல்லது கேடுகளை விளைவிக்கக்கூடிய சிறு உயிரினங்களை இவை உண்பதால், இவை பற்றிய அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நச்சுத்தன்மை வாய்ந்தவை என அறியப்பட்ட சிலந்திகளால் யாராவது தாக்கப்பட்டால், அவர்கள் மரணமடைவதற்கு 1 சதவீதத்துக்கும் குறைவான சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் குறிப்பிடும் இவர், இவற்றுக்கான முறிவு மருந்துகள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

பகிர்ந்துகொள்ள