வீட்டு முற்றத்தில் புதைக்கப்பட்ட பானைக்குள் இருந்து அதிகளவான கசிப்பு பைகள் மீட்பு -ஒருவர் கைது!

வீட்டு முற்றத்தில் புதைக்கப்பட்ட பானைக்குள் இருந்து அதிகளவான கசிப்பு பைகள் மீட்பு -ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் வீடு ஒன்றில் கசிப்ப வியாபாரம் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்க கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று 24.08.2020 குறித்த வீட்டிற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வீட்டினை சோதனை செய்தபோது எந்த தடையங்களும் இல்லாத நிலையில் வீட்டு முற்றத்தில் மண்குடம் ஒன்று நிலத்தில் புதைக்கப்பட்டு அதற்குள் விற்பனைக்கு தயாராநிலையில் பைகட்களில் கட்டப்பட்ட 100 பைக்கட் கசிப்பினை மீட்டுள்ளார்கள்.
சூட்சுமான மறையில் மண்பானையினை நிலத்தில் புதைத்து அதன் வாயினை நிலமட்டத்துடன் மூடி அதற்குள் கசிப்பு பைக்கட்டுக்களை வைத்து விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது விற்பனை செய்யும் குறித்த வீட்டின் குடும்பஸ்தரை பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக தெரிவித்துள்ளார்கள்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments