வீதியால் சென்ற பெண் பிள்ளைக்கு மர்ம உறுப்பை காட்டிய சிங்களக் காடையர்

வீதியால் சென்ற பெண் பிள்ளைக்கு மர்ம உறுப்பை காட்டிய சிங்களக் காடையர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவருக்கு இரணுவ முகாமில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னுடைய ஆண் உறுப்பை காட்டிய நிலையில் குறித்த பகுதியில் மக்கள் கூடியுள்ள நிலையில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது

தேராவில் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் அமைந்திருக்கின்ற இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வீதியால் குறித்த பெண் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த பெண்ணை அழைத்து தன்னுடைய ஆணுறுப்பை இராணுவ சிப்பாய் ஒருவர் காட்டியுள்ளார்​

இந்நிலையில் குறித்த விடயத்தை யுவதி தனது பெற்றோருக்கு தெரிய படுத்தியதை​ தொடர்ந்து குறித்த பகுதி மக்கள் அனைவரும் குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக ஒன்று கூடியுள்ள நிலையில் தற்போது குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது

தற்போது குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக மக்கள் கூடியுள்ள நிலையில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் அவர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருக்கிறார்

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியுமாறு சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு போலீசார் தெரிவித்துள்ள நிலையில் குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றுள்ளார்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளதுடன் படையினரின் உறுதிமொழியை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கிராம மக்கள் கலைந்து சென்று உள்ளார்கள் இவ்வாறான சம்பவம் இனி நடைபெறாது எனபடை அதிகாரிகள் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments