வெடிபொருள் வெடித்தில் இரு சிறுவர்கள் படுகாயம்-வவுனியா!!

வெடிபொருள் வெடித்தில் இரு சிறுவர்கள் படுகாயம்-வவுனியா!!

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  புளியங்குளம் பகுதியில் இன்று (27.05.2020) குண்டு வெடித்ததில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புளியங்குளம் காட்டுப்பகுதியில் வீதியோரமாக கிடந்த வெடிபொருளை அப்பாதயூடாக சென்ற 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அவரின் சக நண்பனுடன் அப்பொருளைசுற்றியலினால் அடித்து உடைத்துள்ளார்.

இதன் போது அவ் வெடிபொருள் வெடித்தில் இரு சிறுவர்களும்படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த சிறுவர்கள் அயலவர்களின் உதவியுடன் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வெடிபொருள் குண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரியவருகின்றது.

பகிர்ந்துகொள்ள