வெடி குண்டுகள் மற்றும் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது!!

வெடி குண்டுகள் மற்றும் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது!!

வட தமிழீழம் , புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இருட்டுமடுப்பகுதியில் சட்டவிரோத மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் வெடி குண்டுகள் மற்றும் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இருட்டு மடு கிராமத்தில் சட்டவிரோத வெடி குண்டு பயன்படுத்தி மிருகங்கள் வேட்டையாடப்படுவதாக புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து

ஜ.பி.பண்டார தலைமையிலான காவல்த்துறையினர் குழுவினர் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு தோடுதல்களை மேற்கொண்ட போது வீடு ஒன்றில் இருந்து 7 பன்றிக்கு வைக்கும் வெடிகுண்டும், 20 லீற்றர் கசிப்டனும் குடும்பஸ்தர் ஒருர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறீலங்கா புதுக்குடியிருப்பு காவல்த்துறை தெரிவித்துள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments