வெல்வது உறுதி நீதிக்காய் வீறுநடைபோடுவோம்!காணொளி இணைப்பு

வெல்வது உறுதி நீதிக்காய் வீறுநடைபோடுவோம்!காணொளி இணைப்பு

தமிழின அழிப்பு முடிந்து பதினொரு ஆண்டுகள் கழித்து அனைத்துலக சமூகம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை ‘இனப்படுகொலை’ என்று மெல்ல மெல்ல அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இது புவிசார் அரசியலின் ஒரு விளைவு என்ற போதும் எம்மவர் பலரது அயராத உழைப்பின் பிரகாரம் இது சாத்தியப்பட்டிருக்கிறது.

முரண்பாடுகள் இருந்தாலும் நோக்கத்தில் தெளிவாக இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

உலகளாவிய அளவில் உலக அரச தலைவர்கள்/ நாடாளுமன்ற உறுப்பினர்கள்/ மனித உரிமை அமைப்பின் தலைவர்கள் என்று பல்வேறுபட்ட தரப்பினரிடமிருந்து இவை பெறப்பட்டிருக்கின்றன.

அதுவே இந்த இணைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

எமது நீதிக்கான பயணத்தில் இது முக்கியமான ஒரு பாய்ச்சல் – நம்பிக்கை தரும் முயற்சி.

இன்னும் எமக்கான ஆதரவு தளத்தைப் பெருக்கத் தொடர்ந்து உழைப்போம்.

அனைவரும் இதை பகிருங்கள். குறிப்பாக தமிழ்ப் பரப்பிற்கு அப்பாலுள்ள உலகின் ஒவ்வொரு கடைக்கோடி மனிதனுக்கும் இது போய்ச் சேரும் வண்ணம் இதைப் பகிருங்கள்.

‘வெல்வது உறுதி’

பகிர்ந்துகொள்ள