வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 54 பேர் உட்பட 3,609 பேருக்கு நேற்றைய தினம் தொற்றுறுதி!

You are currently viewing வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 54 பேர் உட்பட 3,609 பேருக்கு நேற்றைய தினம் தொற்றுறுதி!

இலங்கையில் கொரோனாத் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்றயை தினம் 3,609 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நேற்றைய தினம் (ஓகஸ்ட்-17) 3,609 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் 54 பேருக்கும், புதுவருடக் கொத்தணியில் 3,555 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 365,683 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றில் இருந்து 2,283 பேர் குணமடைந்துள்ளதாகவும் இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களது எண்ணிக்கை 314,340 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று முன்தினம் 171 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதை அடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 6,434 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments