வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை தீா்ப்பு!

வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை தீா்ப்பு!

போதைப்பொருள் கடத்தல் குற்றஞ்சாட்டப்பட்ட ஈரானிய தம்பதியர், பாகிஸ்தானியர் ஒருவர் உள்ளிட்ட 13 பேருக்கு மரண தண்டணை விதித்து இந்தோனேசிய நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் 3 ஈரானியர்கள், ஒரு பாகிஸ்தானியர் மற்றும் 9 இந்தோனேசியர்கள் அடங்குகின்றனர்.

சுமார் 400 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் கடத்தலுடன் இவா்களுக்கு உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவா்களுக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுகபூமி நகர நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதாக இந்தோனேசிய அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இணைய வழி வீடியோ தொடர்பாடல் மூலமாக 13 பேருக்கும் மரண தண்டனை விதித்துத் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒரே நேரத்தில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று என்று சா்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த 13 பேருடன் சேர்த்து இந்தாண்டு இதுவரை 30 பேருக்கு இந்தோனேசிய மரண தண்டனை விதித்துள்ளது. இவா்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தல் வழக்குடன் தொடர்புடையவர்களாவர்.

பகிர்ந்துகொள்ள