வெளிநாட்டில் தமிழ் இளைஞருக்கு நேர்ந்த கதி: கதறும் குடும்பத்தா!

You are currently viewing வெளிநாட்டில் தமிழ் இளைஞருக்கு நேர்ந்த கதி: கதறும் குடும்பத்தா!

தமிழகத்தை சேர்ந்த கவின் என்பவரின் ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபாலின். இவருடைய 32 வயது மதிக்கத்தக்க மகன் கவீன், கப்பல் டீசல் இன்ஜினியராக இந்தோனேஷியாவில் பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் பணியாற்றி வந்த கவின் உட்பட 6 பேர், கடந்த 8-ஆம் திகதி சொந்த ஊர் திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, அவர்களிடம் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி, விமானநிலைய காவல்த்துறை அதிகாரிகள் கைது செய்து, அங்கிருக்கும் பாட்டம் என்ற இடத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

இது பற்றி தனது குடும்பத்திற்கு கவீன் அனுப்பிய அனுப்பிய ஆடியோ மெசேஜில், 15 நாட்களாக உணவு, தண்ணீர் தராமல் இருட்டு அறையில் அடைத்து வைத்திருப்பதாக கதறி அழுகிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கவீன் குடும்பத்தினர் உடனடியாக பரமக்குடி வந்த ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலாவை சந்தித்து, இந்தோனேசியா சிறையில் வாடும் மகன் உட்பட 6 பேரை மீட்க இந்திய தூதரகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்.

அதற்கு கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இருப்பினும் கவீன் கண்கலங்கிய நிலையில் பேசிய அந்த ஆடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments