வெளிநாட்டு பின்னணியை கொண்டவர்களுக்கே அதிக பாதிப்பு! “கொரோனா” அதிர்வுகள்!!

வெளிநாட்டு பின்னணியை கொண்டவர்களுக்கே அதிக பாதிப்பு! “கொரோனா” அதிர்வுகள்!!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், “கொரோனா” பாதிப்புக்குள்ளானவர்களில் அதிகமானவர்கள் வெளிநாட்டு பின்னணியை கொண்டவர்களென ஒஸ்லோ மாநகர நிர்வாகத்தலைவர் “Raymond Johansan” தெரிவித்துள்ளர். நோர்வே சுகாதார நிறுவனமும் இதை உறுதி செய்துள்ளது.

மொழிப்பிரச்சனை காரணமாகவோ, அரசின் “கொரோனா” தொடர்பான பரிந்துரைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளாததாலோ அல்லது சமூக வாழ்வியல் காரணங்களினாலோ மேற்படி வெளிநாட்டு பின்னணியை கொண்டவர்களிடையே பாதிப்பு அதிகமாகியிருக்கலாமெனவும் தெரிவித்திருக்கும் ஒஸ்லோ மாநகர நிர்வாகசபைத்தலைவர், குறிப்பாக சோமாலிய பின்னணியை கொண்டவர்களிடையே தொற்று அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவில் வாழும் வெளிநாட்டு பின்னணியுடையவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அனைத்து வழிகளிலும் முடுக்கி விட்டுள்ளதாகவும், ஒரே வீட்டில் அளவுக்கதிகமானவர்கள் வசிக்கும் பழக்கத்தினாலும் அதிகளவில் தொற்று இவர்களிடையே பரவியிருக்கக்கூடுமெனவும் கவலை தெரிவித்துள்ளார்.

நோர்வே சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா” தொற்றுக்கு ஆளானவர்களில், சோமாலிய நாட்டவர்கள் 201 பேரும், சுவீடன் நாட்டை சேர்ந்த 45 பேரும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 41 பேரும், ஈராக் நாட்டை சேர்ந்த 37 பேரும், ஈரான் நாட்டை சேர்ந்த 36 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 31 பேரும், டென்மார்க் நாட்டை சேர்ந்த 30 பேரும் மேற்படி பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவித்துள்ளது.

சோமாலிய நாட்டவர்களின் சமூக வாழ்வியல் முறையில், கூட்டமாக இருப்பது, கூட்டமாகவே உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு போவது, சுகவீனமடைந்து இருப்பவர்களை பார்ப்பதற்கும் கூட்டமாகவே செல்வது, வீடுகளில் அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமான குடும்ப உறுப்பினர்களோடு வசிப்பது உள்ளிட்ட பழக்கவழக்கங்களாலும் அவர்களிடையே “கொரோனா” தொற்று அதிகளவில் பரவியிருக்க வாய்ப்புக்கள் அதிகமிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments