வெளிநாட்டு விமானங்களை அரசுடைமையாக்கும் ரஷ்யா!

You are currently viewing வெளிநாட்டு விமானங்களை அரசுடைமையாக்கும் ரஷ்யா!

ரஷ்ய விமானசேவை நிறுவனங்களால், வாடகைக்கு அமர்த்தப்பட்ட வெளிநாடுகளின் நிறுவனங்களுக்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து விமானங்களை ரஷ்ய அரசுடைமையாக்கும் விசேட சட்டமூலத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க சஞ்சிகையான “Fortune” தெரிவித்துள்ளது.

ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் பொருளாதாரத்தடைகளை விதித்துள்ளதையடுத்து, இவ்வாறு தடைகளை விதித்த நாடுகளின்மீது ரஷ்யத்தரப்பிலிருந்து பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், ரஷ்ய விமானசேவை நிறுவனங்களால் வெளிநாடுகளிலிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட மேற்படி விமானங்களில் 500 விமானங்கள் ரஷ்ய அரசுடைமையாக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி விமானங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானவையாக இருந்தாலும், சட்டப்படி அவற்றை பறிமுதல் செய்து, ரஷ்ய நிறுவனங்களின் பெயரில் மீள் பதிவு செய்வதோடு, உள்ளூர் விமானசேவைகளுக்கு இவ்விமானங்களை பயன்படுத்தும் விதத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் வசமாகும் மேற்படி 500 விமானங்களும் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானவை என் தெரிவிக்கும் “The Wall Street Journal”,ரஷ்யாவின் மேற்படி நடவடிக்கையை “கொள்ளை” என வர்ணித்துள்ளது. ரஷ்யாவில் தமது வர்த்தகங்களை மேற்கொண்டு, பொருளாதாரத்தடைகள் காரணமாக தமது வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டுள்ள மேற்குலகத்தின் நிறுவனங்களின், ரஷ்யாவில் இருக்கக்கூடிய சொத்துக்கள் அனைத்தும் ரஷ்ய அரசுடைமையாக்கப்படுமென ரஷ்ய அரசு அறிவித்துள்ளதையடுத்து, மேற்படி விமானங்களை ரஷ்ய நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுத்த மேற்குலக நிறுவனங்கள், தமது விமானங்கள் நிரந்தரமாக இழக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளன.

பறிமுதலாகும் விமானங்களில் அநேகமானவை “Boeing”, “Air Bus”, “Bombardier”, “Embraer” மற்றும் “ATR” நிறுவனங்களின் தயாரிப்புக்களாகும், இந்நிலையில், ரஷ்யாமீதான பொருளாதாரத்தடைகள் காரணமாக, இந்நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களான விமானங்களின் உதிரிப்பாகங்களை ரஷ்யாவுக்கு விற்பனை செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளதால், குறித்த விமானங்களின் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்காக நகல் உதிரிப்பகங்களை சீனாவிடமிருந்து ரஷ்யா கொள்வனவு செய்யும் வாய்ப்பு இருப்பதாக கவலைப்படும் இந்நிறுவனங்கள், தரமில்லாத சீனத்தயாரிப்பு பாகங்களை தமது விமானங்களில் பயன்படுத்துவதால் விபத்துக்களுக்கான ஏதுநிலைகள் அதிகமாகும் என்றும், இதனால் பயணிகள் பெரிதும் ஆபத்துக்களை எதிர் நோக்க வேண்டிவருமெனவும் எச்சரித்துள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments