வெளிமாவட்ட மீனவர்கள் 09 பேர் தனிமைப்படுத்தலில்!

வெளிமாவட்ட மீனவர்கள் 09 பேர் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 09 பேருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவர்கள் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் எல்லையைத் தாண்டி இந்தியக் கடல் எல்லைக்குள் சென்று வந்தார்கள் என்று தகவல் கிடைத்ததால் அவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த பரிசோதனை முடிவுகள் நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்று முன்னதாக இராணுவப் பாதுகாப்புடன் வெளிமாவட்ட மீனவர்கள் 09 பேரும் இராணுவ வாகனத்தில் ஏற்றி விடத்தற்பளை தனிமைப்படுத்தல நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்களுடன் தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற மீனவர்கள் உள்ளடங்கலாக 60 பேர் அவர்கள் தங்கியிருக்கும் வாடிகளிலேயே சுயதனிமைப் படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments