தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு வாரங்கள் முன்னெடுக்கப்படும் மருந்து விசிறும் செயற்பாடு உரும்பிராய் கமநிலை சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தென்னை பயிர் சேவை சபை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது விவசாய திணைக்களத்தின் மருந்து விசிறும் இயந்திரத்தின் உதவியுடன் தென்னை மரங்கள் காணப்படும் வீடுகளுக்கு குழுக்களாக செல்லும் தென்னைப் பயிர்ச்செய்கை சபையினர் மற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்கள் அனைத்து தென்னை மரங்களுக்கும் மருந்து விசிறும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த நோயினால் இலங்கையில் தென்னைகள் காய்க்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.






