வெள்ளை மாளிகையை வெழுத்து வாங்கும் கொரொனா: பத்திரிகை செய்லாளருக்கு பாதிப்பு!!

வெள்ளை மாளிகையை வெழுத்து வாங்கும் கொரொனா: பத்திரிகை செய்லாளருக்கு பாதிப்பு!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான  வெள்ளை மாளிகையின் முக்கிய பல உயர் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

அமெரிக் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணிக்குப் பிறகு, 32 வயதான வெள்ளை மாளிகையின் அதிகாரியான இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி

இந்நிலையில்,கெய்லீ மெக்னானி தனது டுவிட்டர் பதிவில்,

“வியாழக்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகத பின்பு, திங்கள்கிழமை காலை எந்த அறிகுறிகளும் தென்படாத நிலையில்கொரோனா தொற்று உறுதியானது” என்று டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் மெக்னானி தெரிவித்துள்ளார்.

“வெள்ளை மாளிகை மருத்துவ பிரிவினால் எந்தவொரு நிருபர்களும், தயாரிப்பாளர்களும் அல்லது பத்திரிகை உறுப்பினர்களும் நெருங்கிய தொடர்புகளாக பட்டியலிடப்படவில்லை ,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“மேலும், மேலும், வியாழக்கிழமை ஒரு வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்பு ஹோப் ஹிக்ஸ் நோயறிதலைப் பற்றி எனக்குத் தெரியாது,” என்று அவர் தெரிவித்துள்ளார். (அன்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பைக் குறிப்பிடுகையில், அவர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை)

ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியின் நெருங்கிய உதவியாளரான ஹோப் ஹிக்ஸ், கடந்த வாரம் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி ஆவார். 

அதன்பிறகு, ட்ரம்பும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

“ஒரு முக்கிய பணியாளர் என்ற முறையில், இந்த நேரத்தில் அமெரிக்க மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்க நான் விடாமுயற்சியுடன் பணியாற்றியுள்ளேன். எனது சமீபத்திய கொரோனா தொற்று சோதனையின் மூலம் நான் தனிமைப்படுத்தல் செயல்முறையைத் தொடங்குவேன், தொலைதூரத்தில்  இருந்து அமெரிக்க மக்கள் சார்பாக தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று மெக்கானி தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபர்ட் ஓ’பிரையன், துணைத் தலைவர் மைக் பென்ஸின் பத்திரிகை செயலாளர் கேட்டி மில்லர் மற்றும் ட்ரம்ப் உதவியாளர் நிக் லூனா உள்ளிட்ட பல வெள்ளை மாளிகை ஊழியர்கள் சமீபத்திய மாதங்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் இந்த ஆண்டு இதுவரை 200,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments