வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இருவர் பலி!

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இருவர் பலி!

மட்டக்களப்பு – வாகரை, புல்லாவி சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர், படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறாலோடையில் இருந்து வாகரை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் புல்லாவி சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மின்கம்பத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றது. இதன்போது ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.

இதில் மோட்டார் சைக்கிளின் பின் பக்கமாக இருந்து வந்த இறாலோடை காயான்கேணியை சேர்ந்த தியாகராஜா கனுஜன் (வயது-18) என்பவர் மரணமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்த இறாலோடை காயான்கேணியை சேர்ந்த செல்வந்திரன் கேதுஜன் (வயது-19) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை

கிளிநொச்சி – திருவையாறு வின்சன் வீதி 3ம் கட்டை பகுதியில் இன்று நண்பகல் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டையிழந்து வேலியின் தூண் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சுந்தரம் மகேந்திரம் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் ஆவார். இறந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments