வேகமாகப் பரவும் டெங்கினால் இதுவரையில் 20 பேர் மரணம்!

வேகமாகப் பரவும் டெங்கினால் இதுவரையில் 20 பேர் மரணம்!

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20 டெங்கு நோயாளர்களும், கடந்த வருடத்தில் 150 டெங்கு நோயாளர்களும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நோயினால் இவ்வருடம் இதுவரை 10 பேரே மரணமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவது போன்று, டெங்கு நோயிலிருந்தும் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தமக்கு உரியது என்றும், அதனாலேயே ஜனாதிபதியின் ஆலோசனைக்குஅமைய, “டெங்கு ஒழிப்பு செயற்பாட்டு செயலணி’ அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்-

உங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல், உங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களைச் சுத்தமாக வைத்திருத்தல் உங்களுடைய பொறுப்பாக எண்ணி செயற்படுமாறுநாம் கேட்டுக்கொள்கின்றோம் – என்றார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments