வேகமாக பரவி வரும், புதிய வடிவிலான “எபோலா” வைரஸ்!

You are currently viewing வேகமாக பரவி வரும், புதிய வடிவிலான “எபோலா” வைரஸ்!
ஆப்பிரிக்காவின் கொங்கோ நாட்டில் கண்டறியப்பட்ட, புதிய வடிவிலான “எபோலா” வைரஸ் வேகமாக பரவி வருவதில், அண்டை நாடான உகண்டாவுக்கும் அது பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த, புதிய வடிவிலான வைரசுக்கான தடுப்பு மருந்துகள் ஏதும் இப்போதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள “எபோலா” வைரசுக்கான மருந்துகள் குறைந்தளவிலாவது இப்புதிய வடிவிலான வைரசை கட்டுப்படுத்தும் என நம்பப்பட்டாலும், தொற்று ஏற்பட்டவர்கள் உயிரிழப்பதற்கு 50 சதவீத வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்புதிய வடிவிலான வைரசின் ஆபத்து கருதி, பாதிக்கப்பட்ட ஆபிரிக்க பகுதிகளில் சுகாதார அவசரகால நிலையை, உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.
கொங்கோவில் மாத்திரம் இதுவரை சுமார் 133 பேர் பலியாகியுள்ளதோடு, அண்டை நாடுகளிலும் உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இவ்வாறான பேரவலங்கள் உலகளாவிய ரீதியில் ஏற்படும்போது அவற்றை கட்டுக்குள் கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்குமாக இயங்கும் தன்னார்வ அமைப்புக்கள், உலக நாடுகளிடமிருந்து பொருளாதாரத்தை பெற்று இயங்கி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இவ்வாறான அமைப்புக்களுக்கு அமெரிக்க வழங்கி வந்த பொருளாதாரத்தில் கணிசமான குறைப்பு செய்து, அல்லது முற்றாக நிறுத்தியுள்ளமையானது, தற்போதைய “எபோலா” பரவலை கட்டுப்படுத்த முடியாமல், “கொரோனா” பெருந்தொற்று காலம் போன்றதொரு அவலத்துக்குள் உலகம் இழுக்கப்படும் என மனிதாபிமான அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் நிதிக்குறைப்பு அல்லது நிதி நிறுத்தம் காரணமாக, சுகாதார சேவைகள் குறைந்து, நோய் கண்காணிப்பு பலவீனமடைந்துள்ளமையால், பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக இவ்வமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply