வேகமாக பரவும் காசநோய்!

வேகமாக பரவும் காசநோய்!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் தற்போது காச நோயின் தாக்கம் வேகமாக பரவிவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா கூறியுள்ளார். 

இந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

கொரோனா வைரஸ் பரவல் என்பது இலங்கையில் குறைந்தளவே காணப்படுகின்றது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் இவ்வைரஸின் தாக்கம் பெரிதளவில் காணப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் 3 தொற்று நோய்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கொரோனா, காச நோய் மற்றும் எயிட்ஸ் நோய்களே இவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனா நோய் தொற்று அல்லது பரவல் தொடர்பாக பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதால், அந்த நோய் பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தக்கூடியவாறு உள்ளது.

ஆனால் கொரோனா அறிகுறி போன்று இருமல் உள்ளவர்களிடம் இருந்து காச நோய் வேறு பலருக்கு பரவக்கூடிய அபாயம் உள்ளது. காச நோயும் கொரோனா போன்று மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து கட்டுப்படுத்த வேண்டிய ஒரு கொடிய நோயாகும். கடந்த 3 நூற்றாண்டு காலமாக உலகெங்கும் காச நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

2018 ஆம் ஆண்டு 1.2 மில்லியன் மக்கள் காச நோயால் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 1.1 மில்லின் சிறுவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகளாவிய ரீதியில் 2020ஆம் ஆண்டு தொடக்கும் 2021ஆம் ஆண்டுகளில் 10 மில்லியன் மக்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 மில்லியன் மக்கள் 

தாங்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமலே அந்த நோயுடன் வாழ்ந்தவர்கள்.மேலும் ஒரு மில்லியன் மக்கள் எதிர்வரும் ஒரு வருடத்தில் உயிரிழக்க வேண்டி நேரிடலாம். எனவே காச நோய் தொடர்பான விழிப்புணர்வும் அதற்கான சிகிச்சையும் மிகவும் இன்றியமையாதது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்தில் இன்றுவரை 90 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுகின்றது. 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments