வேலியில் போன ஓணானை மடியில் வைத்துள்ளோம்!!!

வேலியில் போன ஓணானை மடியில் வைத்துள்ளோம்!!!

ஆரம்பகாலத்தில் ஆயுதமேந்திப்போராடி ஒழுக்கமற்றவர்களாக இனம்காணப்பட்டு சமூகத்தின் நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்ட டக்கிளஸ் போன்ற கொடிய நோய்கள் தமிழ்மக்களின் விடுதலையில் தீராத நோய்களாக இருப்பதுதான் இழிவான நிலையை தமிழ்மக்களுக்கு தொடர்ந்தும் ஏற்படுத்திவருகின்றது.

சொந்த இனத்தைக் காட்டிக்கொடுத்து கொலைசெய்து கல்வியாளர்களையும் மாணவர்களையும் உணர்வாளர்களையும் படுகொலைசெய்து கடத்தி சிங்கள இராட்சத மிருகங்களுக்கு இரையாக்கிய இந்த இரண்டகனை மக்கள் தங்கள் சலுகைகளுக்காக தொடர்ந்தும் நாடாளுமற்றத்திற்கு தெரிவுசெய்வதால் நிரந்தரமான விடுதலைக்கான அரசியலை செய்கின்றவர்களுக்கு எப்போதும் தடைக்கல் என்பதை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது.

தமிழர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளிப்போடுவதற்கு ஒப்பானதுதான் இந்த இரண்டகர்களை தொடர்ந்தும் அரசியல் தளத்தில் வைத்திருப்பது.

வெறுமென அரிசிக்கும் பதவிக்கும் படுபாதகம் செய்தவர்களை பட்டுக்குஞ்சம் கட்டிவைத்திருப்பதானது நிலையான தமிழ்மக்களின் தீர்வுத்திட்டத்திற்கு சாவுமணியடிப்பதாகவே இருக்கப்போகின்றது.

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் உரிமைக்காக ஒலித்த குரல்களை மக்கள் தவறாக தெரிவுசெய்துவிட்டார்களென ஒப்பாரி வைக்கும் டக்கிளஸ் காலங்காலமாக தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு சகுனியாக இருந்து வருவதோடு அரச மகுடியாக மகா கேடியாக உலகத்தமிழ் உள்ளங்களில் வாழ்கின்றார் என்பதை அடிக்கடி மறந்துவிடுகின்றார்.

அரச பொருளாதாரத்தின் நிழலில் அண்டி வாழும் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா இன்று வரைக்கும் மக்களை ஏமாற்றிவருவது சலுகை அரசியலுக்கூடாக என்பதை மக்கள் விழித்துக் கொள்ளாத நிலையில்தான் தவறானவனின் அரசியல் அதிகாரம் தமிழ்மக்களின் உரிமைக்குரலுக்கு உபத்திரமாக இருக்கமுடிகின்றது.

ஆனாலும் இந்த இழிநிலைக்காலம் மாறும் மக்கள் விழிப்படையும் காலம் அரங்கேறும் அப்போது டக்கிளஸ் போன்ற எட்டப்பன்கள் எட்டவைக்கப்படுவார்கள்.

4 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments