வைகோ : உயிர் காக்கும் மருத்துவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்!

வைகோ : உயிர் காக்கும் மருத்துவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்!

மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இந்திய மத்திய – மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் உயிரிழந்த ஆந்திர மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் இச்சமூகம் அவமதித்துள்ளது என வேதனை தெரிவித்துள்ள வைகோ, நீலகிரி மாவட்டம், தெங்குமரஹாடா மலை கிராமத்தில் அரசு மருத்துவராக பணிபுரிந்த இளம் மருத்துவர் ஜெயமோகன், காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் கொரோனா எனக் கூறி இறுதிச் சடங்கு நடத்த சொந்த ஊரான மேட்டுப்பாளையம் சிறுமுகை ரேயான் நகரில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மனிதநேயம் மரித்துப்போய்விட்ட இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடைபெறக் கூடாது என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments