வைத்தியர்களை நியமிக்க கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

வைத்தியர்களை நியமிக்க கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்ய கோரி எதிர்வரும் 17.08.2020 அன்று மாபெரும் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மாவட்ட மருத்துவ மனையில் கடந்த பல மாதங்களாக நிலவி வரும் வைத்தியர்கள் வெற்றிடம் இதுவரை நிரப்பப்படவில்லை மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல தடவைகள் சம்மந்தப்பட்ட அமைச்சு திணைக்களங்களுக்கு எடுத்துக்கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த 11.08.2020 அன்று மாவட்ட மருத்துவமனை மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர் .

இன்னிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை மாவட்ட வைத்திய சாலை நோயாளர் நலன்புரி சங்கம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி ஒன்றியம் கிராம மக்களுடன் இணைந்து பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments