வைத்தியர் பற்றாக்குறையினை மாவட்ட மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தினை நடத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்!

வைத்தியர் பற்றாக்குறையினை மாவட்ட மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தினை நடத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்!

வைத்தியர் பற்றாக்குறையினை மாவட்ட மக்களும் மக்கள் பிரதிநிதிகளம் போராட்டத்தினை நடத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்-மாவட்ட மருத்துவ அதிகாரிகள் சங்கம்!


முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்க தேவையான மருத்துவர்கள் இதுவரை நிதந்தரமாக நியமிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட மருத்துவமனை மருத்துவர்கள் மூன்றாவது தடவையாக 19.08.2020 அன்று காலை 8.00 மணிதொடக்கம் 24 மணிநேர பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். 


இதன்பொது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மருத்தவ அதிகாரிகள் சங்கத்தினர் இதனை தெரிவித்துள்ளார்கள்.
மாவட்ட மருத்துவமனையில் உள்ள மருத்துவர் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்ய பலதடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட போதும் மக்கள் போராட்டம் நடத்தியும் இது வரை நிதந்தர மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலை தொடர்ந்து வருவதாக மாவட்ட அரச மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
இதனால்  நோயாளர்கள் மருத்துவ சேவையினை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
பணிபுறக்கணிப்ப தொடர்பில் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உபதலைவர் வைத்தியர் சி.பிரபாகரன் ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கையில்.


முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மிக நீண்ட நாட்களாக நிலவி வரும் மருத்தவர் பற்றாக்குறையினை போக்ககோரி உரிய தரப்பினரை மீண்டும் மீண்டும் கோரியும் சாதகமான பதில் எவையும் கிடைக்காத நிலையில் மாஞ்சோலை மருத்துவமனையின் வைத்தியர் பற்றாக்குறையினை விரைந்து நீக்க கோரி இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்


வைத்தியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யகோரி பல தடவைகள் அடையாளபுறக்கணிப்பு போராட்டங்கள் மூலம் உரிய தரப்பினருக்கு அறிவித்து இதுவரை வதை;தியர்களுக்கான பதிய நியமனங்கள் வழங்கப்படவில்லை இரண்டாயிரம் வரையான உள்ளகபயிற்சி முடித்து நியமனம் வழங்க காத்திருக்கம் வைத்தியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக நியமனங்கள் வழங்கப்படவில்லை மருத்தவர் பற்றாக்குறையினை போக்க சுகாதார அமைச்சு யாழ் போதான வைத்தியசாலையில் இருந்து நால்வரை விடுவிக்க பெயர் குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


ஆயினும் அதற்கு பதிலாக வேறு நான்கு வைத்தியர்கள் யாழ்போதனா வைத்தியசாலையில் இருந்து இரண்டு கிழமை மட்டும் குறிப்பிடப்பட்டு 17.08.2020 அன்று அனுப்பிவைக்கப்பட்டுளள்ளார்கள்.இது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நிதந்தர வைத்தியர்கள் கிடைப்பதை திட்டமிட்ட முறையில் தடக்கும் ஏமாற்று நடவடிக்கையாகவே எம்மால் பார்க்கப்படுகின்றது.


மகப்பேற்று விடுதியில் ஒரு மருத்துவரே உள்ளார் இரண்டு வாரத்திற்கு விடுவிக்கப்பட்ட அனுபவம் இல்லாதவைத்தியர்களை பயன்படுத்தி தற்காலிகமாக இரண்டு வாரத்திற்கு மகப்பேற்று பயிற்சியினை வழங்கி இயங்க முற்படும் பொழுது அவர்கள் இரண்டு கிழமையில் யாழ் பேதனா வைத்தியசாலைக்கு சென்று விடுவார்கள்.


இவ்வாறு இது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடையமாகும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் சேவைதரத்தினை பாதிக்கும் முல்லைத்தீவு மாவட்டம்தான் இந்த நாட்டில் அதிகளவு கர்ப்பிணி இறப்பு வீதம் அதிகமான மாவட்டம்.


இவ்வாறு மாறி மாறிவிடவிக்கப்படும் வைத்தியர்களால் தாய்சேய் சுகாதார சேவையினை தொடர்ந்த வழங்கமுடியாது இதனை கருத்தில் கொண்ட யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்படும் வைத்தியர்கள் நீண்டகால அடிப்படையில் விடுவிக்கப்பட்டால் சேவையினை வழங்கமுடியும்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக சிறந்த சேவையினை வழங்குவதற்காக நான்கு நிதந்தர வைத்தியர்களை எதிர்பார்த்து இதய சுத்தியுடன் செயற்பட்ட செயற்பாடானது சுகாதார அதிகாரிகளின் அசமந்த போக்கும் யாழ் போதானவைத்தியசாலை பணிப்பளரின் பொறுப்பற்ற செயலாலும் மிகுந்த மன உழைச்சலக்கும் வேலைப்பழுவிற்கும் நாங்கள்ள உள்ளாகியுள்ளோம்.


 எமது தாய் சங்கத்தினால் இங்கு உள்ள வைத்தியர்களை கொண்டு எங்களால் இயன்ற சேவையினை மட்டும் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்போத மக்களின் சிரமத்திற்கு சுகாதார அதிகாரிகளே உரிய பொறுப்பெற்க வேண்டும்.
நியாயமான போராட்டத்தினை நாங்கள் அனைத்து வழிகளிலும் சென்று கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இதற்கு அடுத்த கட்டமாக மாவட்ட மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் அரச உயர் அதிகாரிகளும்தான் இந்த போராட்டத்தினை நடத்தி சென்று வைத்தியசாலைக்கு நிதந்தர வைத்தியர்களை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments