வைரஸ் பயத்தால் தொலைபேசிக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது!

வைரஸ் பயத்தால் தொலைபேசிக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது!

கோவிட் -19 வைரஸ் குறித்த அச்சம் காரணமாக சமீபத்திய நாட்களில் பல நிறுவனங்கள் விலகியதை அடுத்து, உலக கைத்தொலைபேசிக் கூட்டம் (World Mobile Congress) ரத்து செய்யப்பட்டுள்ளது. GSMA இன் அமைப்பாளர் இதை பல சர்வதேச ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பயம், பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் பிற சூழ்நிலைகள் குறித்த உலகளாவிய அக்கறை காரணமாக GSMAக்கு கண்காட்சி நடத்துவது சாத்தியமற்றதாகியுள்ளது என்று பைனான்சியல் டைம்ஸ் (Financial Times) தெரிவித்துள்ளது.

இந்த கண்காட்சி இம்மாதம் 24-27 வரை பார்சிலோனாவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. 33 ஆண்டு வரலாற்றில் இதுவே இந்த கண்காட்சி முதல் முறையாக ரத்து செய்யப்படுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த கண்காட்சியை பார்வையிடுகின்றனர், இது ஐரோப்பாவின் மிகப்பெரிய ஒரு கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள..

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!