ஸ்பெயினில் பிணவறையாக மாறும் பல்பொருள் அங்காடித்தொகுதி! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing ஸ்பெயினில் பிணவறையாக மாறும் பல்பொருள் அங்காடித்தொகுதி! “கொரோனா” அதிர்வுகள்!!

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் “மாட்ரிட் / Madrid” இல் கொரோனா மரணங்கள் தொடர்வதால், மரணமடைந்தவர்களின் உடலங்களை பாதுகாக்க போதிய இடமில்லாததால், பிரபலமான பல்பொருள் அங்காடித்தொகுதியொன்று (Shopping Sentre) தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்டுள்ளது.

Madrid இலுள்ள அந்திமகால சேவை நிறுவனங்களின் பிணவறைகளில் உடல்கள் நிரம்பியுள்ளதால் தொடர்ந்தும் மரணமடைந்து வருபவர்களின் உடலங்களை பாதுகாப்பதற்கு மேலதிக இடம் தேவைப்படுவதாகவும், குறித்த அங்காடித்தொகுதியில், செயற்கையாக அமைக்கப்பட்ட பிரமாண்டமான, உறைநிலை பாகையைக்கொண்ட பனிக்கால விளையாட்டு மைதானம் இருப்பதால், அந்த உள்ளக மைதானத்தை தற்காலிக பிணவறையாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

உறைநிலை பாகையைக்கொண்ட மேற்படி உள்ளக பனிக்கால விளையாட்டரங்கில் உடலங்களை பதப்படுத்தி வைக்கக்கூடிய உறைநிலை வசதி இருப்பதால், இறுக்கமாக மூடிய பெட்டிகளில் வைக்கப்படும் உடலங்கள், இங்கு சேமித்து வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள