ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்ற 72 அகதிகள் பலி!

You are currently viewing ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்ற 72 அகதிகள் பலி!

ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்று உயிரிழந்த அகதிகள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இரு நாடுகளுக்கும் இடையே மத்திய தரைக்கடல் உள்ளது. அதேவேளை, ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற பகுதி சீயடா. இந்த நகரம் மொராக்கோவுடன் எல்லையை பகிர்கிறது. இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. சீயடா மொராக்கோவுடன் நிலம், கடல் வழியாக எல்லையை பகிர்கிறது.

முஸ்லிம் நாடான மொராக்காவில் வறுமை, வேலையின்மை போன்றவை காரணாக ஏராளமானோர் புலம்பெயர்ந்து ஸ்பெயினுக்குள் வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மொராக்கோ நாட்டு மக்கள் சட்டவிரோதமாக ஸ்பெயினுக்குள் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

மொராக்கோ மக்களை உடனடியாக திருப்பி அனுப்பக் கூடாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸ்பெயின் அரசு உள்ளது.

இதனிடையே, நேற்று முன் தினம் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் கடல் வழியாக ஸ்பெயினின் சீயடா நகருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொராக்கோ நாட்டினர் திடீரென ஸ்பெயினுக்குள் நுழைந்தனர். இந்த சம்பவம் ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது மொராக்கோ எல்லையோரக் கடற்கரையில் மேலும் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்களை மீண்டும் மொராக்கோவுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply