ஸ்பெயின் : முதியவர்கள் கவனிப்பின்றி இறக்க விடப்படுகின்றனர்!

You are currently viewing ஸ்பெயின் : முதியவர்கள் கவனிப்பின்றி இறக்க விடப்படுகின்றனர்!

ஸ்பெயினின் இராணுவத்தினர், வயதானவர்கள் பராமரிப்பு மையங்களில் கவனிப்பின்றி இறந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும், சனிக்கிழமை இரவு ஸ்பெயின் பிரதமர் Pedro Sánchez, நாடு இன்னும் மோசமான நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

தலைநகர் மாட்ரிட்டில் (Madrid) உள்ள மருத்துவ மனைகளை கிருமி நீக்கம் செய்ய ஸ்பெயினில் இராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள் கைவிடப்பட்டு இறந்து கிடப்பதை அவர்கள் இங்கு கண்டுபிடித்துள்ளனர் என்று பாதுகாப்பு மந்திரி Margarita Robles ஸ்பெயினின் தொலைக்காட்சியான Telecinco க்கு தெரிவித்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல் : Dagbladet

பகிர்ந்துகொள்ள