சுவீடனில் கொரோனா : சுவீடனில் இதுவரை 401 பேர் கொரோனாவுக்கு பலி!

சுவீடனில் கொரோனா : சுவீடனில் இதுவரை 401 பேர் கொரோனாவுக்கு பலி!

இன்று, கொரோனா வைரசின் விளைவாக சுவீடனில் 401 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக Aftonbladet தெரிவித்துள்ளது. இது கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆக அதிகரித்துள்ளது.

சுவீடனில் இதுவரை 6,830 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும், அதிகாரிகள் தெரிவித்ததை விட சுவீடனில் கொரோனா இறப்பு அளவு அதிகமாக இருக்கலாம் என்றும் ஞாயிறு காலை செய்திகள் கூறுகின்றன.

“நாம் எதையும் மறைக்க முயற்சிக்கவில்லை, கண்டுபிடிக்கப்படாத மரணங்கள் உள்ளன என்ற தவறான செய்தியை ஒருவரும் உருவாக்க முடியாது. நாங்கள் அனைத்தையும் கண்டுபிடித்துள்ளோம், ஆனால் சில சமயங்களில் அவற்றை சற்று தாமதமாக கண்டுபிடித்துள்ளோம்” என்று மாநில தொற்றுநோயியல் நிபுணர் Anders Tegnell கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments