ஸ்வீடனைப் பற்றி டிரம்ப் : ஸ்வீடனை பின்பற்றியிருந்தால் இரண்டு மில்லியன் மக்களை இழந்திருப்போம்!

ஸ்வீடனைப் பற்றி டிரம்ப் : ஸ்வீடனை பின்பற்றியிருந்தால் இரண்டு மில்லியன் மக்களை இழந்திருப்போம்!

கொரோனா நெருக்கடியில் ஸ்வீடனின் மூலோபாயம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என்ன நினைக்கின்றார் என்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டது.

“நாங்கள் அவர்களின் வழியைப் பின்பற்றியிருக்கலாம், அவ்வாறு செய்திருந்தால், நாங்கள் இப்பொழுது இரண்டு மில்லியன் மக்களை இழந்திருப்போம்” என்றும் மேலும், இதனால் “ஸ்வீடன் மிகவும் பாதிக்கப்படுகிறது” என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதாக Expressen நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஸ்வீடனை விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. கொரோனா நிலைமையை ஸ்வீடன் எவ்வாறு சமாளிக்கின்றார்கள் என்பது குறித்து டிரம்ப் ஏற்கனவே முன்னர் விமர்சித்ததோடு, ஸ்வீடன் “பெரிதும் பாதிக்கப்படுவதாக” கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், ஸ்வீடனின் மாநில தொற்றுநோயியல் நிபுணர் Anders Tegnell இந்த விமர்சனத்தை நிராகரித்துள்ளார்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments