ஸ்வீடன் குடிமக்களை, நோர்வே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது!

ஸ்வீடன் குடிமக்களை, நோர்வே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது!

இரண்டு வாரங்களில் சுவீடன் குடிமக்கள், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரேக்க நாடுகளுக்கு அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் பயணிக்க முடியும். ஆனால், நோர்வே மற்றும் டென்மார்க்குக்கு பயணிக்க முடியாது.

ஜூன் 30 முதல், ஐரோப்பாவில் பத்து நாடுகளுக்கான கொரோனா தொற்றுநோய் தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட பயண கட்டுப்பாடுகளை சுவீடன் வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்கின்றது. இதனால், ஸ்வீடன் குடிமக்கள் கிரீஸ், குரோஷியா, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், பிரான்ஸ், ஐஸ்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்று வெளியுறவு மந்திரி Ann Linde தெரிவித்துள்ளார்.

நோர்வே மற்றும் டென்மார்க்கிற்கான பயணத்தடையை ஸ்வீடன் ஏன் இன்னும் நீக்கவில்லை என்று கேட்கப்பட்டபோது, ​​அண்டை நாடுகளின் சொந்த விதிமுறைகளே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை, அல்லது நீங்கள் வீட்டிற்கு செல்வதற்கான விமானங்கள், தொடருந்து மற்றும் படகுகள் இயங்காமை போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டது. சில பகுதிகளுக்கு பயணிப்பதை தவிர்க்கும்படி பொது சுகாதார அதிகாரிகள் ஆலோசனை கூறலாம், ஆனால் இது அப்படி அல்ல என்று Ann Linde மேலும் கூறியுள்ளார்.

மற்றைய நோர்டிக் நாடுகள் ஒருவருக்கொருவர் எல்லைகளைத் திறந்தாலும், ஸ்வீடனை வெளியே வைத்திருப்பதன் விளைவாக நோர்டிக் ஒத்துழைப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று Ann Linde முன்பு எச்சரித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (NTB)

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments