ஹம்பகாவினை சேர்ந்த 160 பேர் கேப்பாபிலவில் தனிமைப்படுத்தல்!

ஹம்பகாவினை சேர்ந்த 160 பேர் கேப்பாபிலவில் தனிமைப்படுத்தல்!

ஹம்பகா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா சமூகத்தொற்றினை தொடர்ந்து மினுவாங்கொட பகுதியில் உள்ள பலர் வடக்கில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு கேப்பாபிலவு 59 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 5 பேருந்துக்களில் 160 பேர் நேற்று (08.10.1010) இரவு கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளார்கள்.
இராணுவ பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் இவர்களிடம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளன.

பகிர்ந்துகொள்ள