ஹவாய்க்கு(HUAWEI) எதிராக மீண்டும் புதிய வழக்குகள்!

ஹவாய்க்கு(HUAWEI) எதிராக மீண்டும் புதிய வழக்குகள்!

சீன தொலைத் தொடர்பு நிறுவனமான HUAWEI வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகவும், எதிர்ப்பாளர்களைக் கண்காணிக்க ஈரானுக்கு உதவியதாகவும் அமெரிக்க வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த புதிய குற்றச்சாட்டுகள் அமெரிக்க அதிகாரிகளுக்கும் உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான மோதலில் விரிவாக்கம் ஆகும்.

வளர்ந்துவரும் ஆறு அமெரிக்க நிறுவனங்களின் அறிவுசார் சொத்துக்களை ஹவாய் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் கையகப்படுத்தவும், துஷ்பிரயோகம் செய்யவும் முயன்றதாக அந்த வழக்கு கூறுகின்றது.

இந்த குற்றச்சாட்டில் ஹவாய், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் கனடாவில் கைது செய்யப்பட்ட அதன் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஷோ (Meng Wanzhou), மோசடி மற்றும் அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளன .

2009 ஆம் ஆண்டில் தெஹ்ரானில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்க கண்காணிப்பு உபகரணங்களை நிறுவனம் ஈரானுக்கு விற்றது என்றும் அமெரிக்கா நம்புகின்றது.
அது மட்டுமன்றி மேலதிகமாக வடகொரியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும் வடகொரியாவுடன் வர்த்தகம் செய்ததாக ஹவாய் நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது..

சமீபத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் நியாயமற்றவை என்று ஹவாய் கூறியுள்ளது. மற்றும் இந்த வழக்கு விரைவில் கைவிடப்படும் என்று நம்புவதாகவும் ஹவாய் கூறியுள்ளது. (NTB)

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!