ஹாங்காங் மீது அதிக அதிகாரம் செலுத்த முனையும் சீனா! எதிர்க்கும் மேற்குலகம்!!

ஹாங்காங் மீது அதிக அதிகாரம் செலுத்த முனையும் சீனா! எதிர்க்கும் மேற்குலகம்!!

ஹாங்காங் மீதான தனது ஆதிக்கத்தை மேன்மேலும் இறுக்கும் வகையில்புதிய தேசிய பாதுகாப்புசட்டமூலமொன்றை நிறைவேற்ற சீனா முயல்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மேற்படி சட்டமூலம் சீன நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுமானால்ஹாங்காங்கின் சுயஆளுமைசீனாவின் ஆளுமைக்குள் நசுங்கி விடுமென ஹாங்காங் மக்கள் கருதுவதால்அங்குமேற்படி சீனாவின் உத்தேச சட்டமூலத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில்சீனாவின் இச்சட்டமூலம் தொடர்பில் கருத்துரைத்த அமெரிக்கவெளியுறவுத்துறைஇச்சட்டமூலத்தினால் ஹாங்காங்கின் இறைமை பாதிக்கப்படுமெனதெரிவித்திருக்கும் கருத்தை கண்டித்துள்ள சீனப்பிரதமர்அமெரிக்கா காட்டுமிராண்டித்தனமாககருத்துரைப்பதை நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்பிரித்தினியாவிற்குள் எப்போதும் வருவதற்கான அனுமதியை வைத்திருக்கும்சுமார் 3 இலட்சம் ஹாங்காங் வாசிகளுக்கு நிரந்தர பிரித்தானிய குடியுரிமையை வழங்கஆலோசிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவுக்குள் வரும் குடியேறிகளையும்ஏனைய ஐரோப்பி நாடுகளிலிருந்துவருபவர்களையும் கட்டுப்படுத்துவது என்ற பிரித்தானிய அரசின் கொள்கை முடிவுக்கு முரணாகபிரித்தானிய அரசின் இந்த அறிவிப்பு இருந்தாலும்சீனாவின் உத்தேச சட்ட மூலத்தை சீனாதிரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டுமென பிரித்தானியா கொடுக்கும் மறைமுக அழுத்தமாகவேஇவ்வறிவிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதேவேளைபிரித்தானியாஅவுஸ்திரேலியாஅமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளும்சீனாவின் உத்தேச சட்டமூலத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

ஹாங்காங் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டுக்கு மாறுவதற்குமுன்னதாக 1984 ஆம் ஆண்டில் ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தஹாங்காங்கின் இறைமைதொடர்பலான ஒப்பந்தத்தை சீனாவின் உத்தேச சட்டமூலம் மீறுவாதாக இந்தாடுகள்கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments