ஹெய்ட்டி நிலநடுத்தத்தால் பலியானோர் தொகை 2,207-ஆக உயர்வு; 344 பேரைக் காணவில்லை!

You are currently viewing ஹெய்ட்டி நிலநடுத்தத்தால் பலியானோர் தொகை 2,207-ஆக உயர்வு; 344 பேரைக் காணவில்லை!

ஹெய்ட்டியில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் திகதி ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், 344 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக ஹெய்ட்டி சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடுபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 12,268 ஆக உயர்ந்துள்ளது.

53,000 வீடுகள் மழுமையாக அழிந்துவிட்டன. சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 77,000 ஐ கடந்துள்ளதாகவும் ஹெய்ட்டி சிவில் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளர்.

இந்த நிலநடுக்கத்தின் மையம் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது. எனினும் பின்னர் அந்த எச்சரிக்கை இரத்துச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments