இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு குறிப்பாக ஐரன் டோம் , டேவிட்ஸ் ஸ்லிங் , மற்றும் ஏரோ சிஸ்டம் ஆகியவை உலகின் மிக மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளாகக் கருதப்படுகின்றன.
இருப்பினும், 2025-ஆம் ஆண்டில் இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்ததால், இந்த அமைப்புகளின் செயல்திறன் விகிதம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகளை தடுக்கும் திறன் 90மூ இல் இருந்து 60மூ ஆக குறைந்துவிட்டமையை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக சில சர்வதேச ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க இராணுவ தொழில்நுட்பங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் இந்த அமைப்புகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2024 ஒக்டோபரில் ஈரான் நடத்திய ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் II தாக்குதலில், ஈரான் சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்தியது.
இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை விட மிகப்பெரிய அளவில் இருந்ததாகவும், இதனால் கணிசமான சேதம் ஏற்படவில்லை என்றாலும், அமைப்புகளை தாக்க முயன்றதாகவும் கூறப்பட்டது .
எனினும், 2025 ஜூன் 17 அன்று, ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாகவும், இது இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளின் பலவீனத்தை வெளிப்படுத்தியதாகவும் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், AI உருவாக்கிய தவறான தகவல்கள், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தோல்வியடைந்ததாகக் கூறி பரவி வருவதால், உண்மையான செயல்திறன் விகிதம் குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவை மோதலின் உளவியல் தாக்கத்தை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.