அடக்குதலை உடைத்தெறி!

You are currently viewing அடக்குதலை உடைத்தெறி!


1921 இல் அய்னூறு அறிஞர்களின்
அறிவியற் சிந்தனையில் உதித்தது
தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு
எனும் புரட்சி!

மறை மலை அடிகளாரின் தமிழ்வளர்ப்பில் தலைநிமிர்ந்து நின்றது தமிழர் புத்தாண்டு!
ஏழு தமிழர்களின் அசைக்கமுடியாத தனித்தமிழ் எழுச்சியில் உயர்ந்து நின்றது
தை முதல்நாள்!

எல்லா இனத்திற்கும் தையில்
தொடங்கும் புத்தாண்டு
தமிழ் இனத்திற்கு இடையில்
வருவதென்பது யாதார்தங்களை
கடந்து நகைப்பில் ஆழ்த்துகிறது!

தொடக்க நாளை அடக்க நினைக்கும்
ஆரியக்கூட்டத்தின் அடிவருடிகளாய்
எம்மினம் இன்றுமிருப்பது துன்பியலே!

ஆரியத்தின் அடக்குமுறை பிறக்கும்
புத்தாண்டில் மட்டும் புதைந்து கிடக்கவில்லை!

பெற்றபிள்ளைக்கு பெயர்வைப்பதிலிருந்து
பிராத்தனை செய்யும் கோவில் வரை
நிரம்பிக்கிடக்கிறது!

எல்லாம் அறிந்தும் வாழையடி வாழையாக வந்த வழிமுறையென
தன்மொழிக்கே துரோகமிழைக்கும்
கொடுமையே
எம் இனத்தில் நடக்கிறது!

மூவேந்தர் வழி வந்து முப்படை கட்டி
தமிழுக்கு மகுடம் சூட்டிய
தானைத்தலைவன் கூட
தமிழர் புத்தாண்டு எதுவென
புடம்போட்டுக்காட்டியவர்!

முப்பது ஆண்டுகால போருக்குள்ளும்
பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனரே தவிர!
எந்த இடத்திலும்
சித்திரை நாளுக்கு அங்கிகாரம்
கொடுத்ததில்லை!

தன்னுடைய புத்தாண்டு எதுவென்றறியாத
இந்த பாவப்பட்ட இனத்தில்
எப்படி மொழிப்புரட்சி தோன்றும்!

காலத்துக்கு காலம் கருத்துப் பிறழ்வில்
திளைக்கும்!
விபச்சார சிந்தனையில் எப்படி அய்நூறு அறிஞர்களின் ஆய்வுப்புரட்சி
நிலைக்கும்!

திருவள்ளுவராண்டு தையில் தொடங்கி
மார்கழியில் முடிவதால்
தமிழருக்கு புத்தாண்டு தை முதல் நாளென
அழுத்திச்சொல்
தமிழா!
மாறி மாறி ஆண்ட அரசுகளின் பாதம்கழுவிய பயனால்
தமிழரின் வரலாறு சிதைந்து போவதுதான்
சரியா தமிழா!

அடங்கிக்கிடக்க ஆமையல்ல உன் அகத்தினடிமை விலக்கு! முடங்கிகிடந்தது போதும் உன் முகத்திரையை கழற்று!

✍ தூயவன்

பகிர்ந்துகொள்ள