அநாதைகளாக அடக்கம் செய்யப்படும் உடல்கள்!

You are currently viewing அநாதைகளாக அடக்கம் செய்யப்படும் உடல்கள்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனா வைரஸால் இறந்தவர்கள் மற்றும் யாராலும் உரிமை கோரப்படாதவர்களின் சடலங்கள் பிராங்க்ஸின் கிழக்கே ஹார்ட் தீவில் அடக்கம் செய்யப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல தசாப்தங்களாக குடும்ப உறுப்பினர்களால் உரிமை கோரப்படாத இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய ஹார்ட் தீவு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நெருக்கடியின் போது நாங்கள் தொடர்ந்து தீவைப் பயன்படுத்துவோம், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எதிர்வரும் நாட்களில் தீவில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்று நியூயார்க் நகர மேயரின் பத்திரிகை செயலாளர் ஃப்ரெடி கோல்ட்ஸ்டைன் கூறினார்.

கொரோனாவால் இறந்த நபரின் உறவினர்களை 14 நாட்களுக்குள் அதிகாரிகள் தொடர்பு கொண்டால், உடல் ஹார்ட் தீவுக்கு நகர்த்தப்படாது என்று கோல்ட்ஸ்டெய்ன் கூறினார்.
தொற்றுநோய்களின் போது இறப்பவர்களுக்கு அடக்கம் செய்ய இடம் இருப்பதை உறுதி செய்வதற்கான நகரத்தின் திட்டத்தின் ஒரு பகுதி இது.

எப்போதும் போல சிறை கைதிகள் ஹார்ட் தீவில் உடல்களை அடக்கம் செய்யும் பணிபுரிய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளி நோக்கங்களுக்காக தீவில் உள்ள கைதி தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தனியார் ஊழியர்கள் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள