அனைத்து மக்களையும் பரிசோதிக்கும் ஐஸ்லாந்து! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing அனைத்து மக்களையும் பரிசோதிக்கும் ஐஸ்லாந்து! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” பரவலினால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது நாட்டு மக்கள் அனைவரையும், “கொரோனா” பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கு ஐஸ்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் நாளன்று முதலாவது “கொரோனா” தொற்று அறியப்பட்டதிலிருந்து, தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவர்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி வருவதாக ஐஸ்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து மக்களையும் இவ்வாறு பரிசோதனைகளுக்கு உள்ளாக்குவதன்மூலம், நாட்டில் எத்தனை விகிதமானவர்கள் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கணக்கெடுப்பை ஓரளவுக்கு நிச்சயப்படுத்திக்கொண்டு, அதற்கேற்ப பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க முடியுமென தெரிவிக்கும் ஐஸ்லாந்து அதிகாரிகள், நாட்டு மக்களில் 50 சதவிகிதமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்படுவார்களானால், தொற்று பரவுவதை தடுக்கும் முயற்சிகள் பயனளிக்காதெனவும் தெரிவிப்பதோடு, எனவே, அனைவரையும் பரிசோதிப்பது அவசியமெனவும் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்லாந்து அதிகாரிகளின் கருத்தோடு ஒத்துப்போகவேண்டியுள்ளதென தெரிவித்திருக்கும் நோர்வேயின் “தொற்றுநோய் தடுப்பு” பிரிவின் அதிகாரியான “Frode Forland” தெரிவித்துள்ளதோடு, நோர்வேயிலும் அனைத்து மக்களையும் பரிசோதிக்கும் நடைமுறையை கொண்டுவரவேண்டுமெனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐஸ்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், “கொரோனா” வைரசின் 44 வெவ்வேறுவிதமான பிறழ்வுகள் அவதானிக்கப்பட்ட்டுள்ளதாகவும், தொற்றுக்கு ஆளான ஒருவரின் உடலில் இரு வேறுவேறான “கொரோனா” வைரசுக்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வீரியம் அதிகமான “கொரோனா” வைரசும், கூடவே வீரியம் குறைந்த வைரசும் ஒரே மனிதரின் உடலில் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து மக்களையும் பரிசோதிக்கும் ஐஸ்லாந்து!

இதேவேளை, இவ்வாறு இரு வேறுவேறு விதமான “கொரோனா” வைரசுக்களின் தொற்றுக்கு ஆளான நபரிடமிருந்து வீரியம் குறைந்த “கொரோனா” வைரசே பரவியுள்ளதாகவும், வீரியம் குறைந்த வைரசு அதிகளவில் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கும் ஐஸ்லாந்து அதிகாரிகள், தமது ஆய்வுகளில் அவதானிக்கப்பட்ட 44 வேறுவேறான “கொரோனா” வைரசுக்களின் மரபணுக்கள் தம்மால் தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள