அமெரிக்காவில் ‘சூப்பர்மேன்’ ஆடை 1,93,750 டாலருக்கு ஏலம்

  • Post author:
You are currently viewing அமெரிக்காவில் ‘சூப்பர்மேன்’ ஆடை 1,93,750 டாலருக்கு ஏலம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘ஜுலியன்’ என்ற ஏல நிறுவனம் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்களை நேற்று முன்தினம் ஏலத்தில் விற்பனை செய்தது.

இதில் 1978-ம் ஆண்டு வெளியான ‘சூப்பர்மேன்’ படத்தில் சூப்பர் மேனாக நடித்திருந்த கிறிஸ்டோபர் ரீவி அணிந்திருந்த உடை 1 லட்சத்து 93 ஆயிரத்து 750 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரம்) ஏலம் போனது.

சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஒன்றின் உடை இந்தளவுக்கு அதிக தொகைக்கு ஏலம் போனது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள