அமெரிக்காவில் முடக்கல் நிலைக்கு எதிராக டிரம்ப் அதிர்ச்சி வேண்டுகோள்!

You are currently viewing அமெரிக்காவில் முடக்கல் நிலைக்கு எதிராக டிரம்ப் அதிர்ச்சி  வேண்டுகோள்!

அமெரிக்காவின் பல மாநிலங்களில் காணப்படும் முடக்கல் நிலைக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதனை நியாயப்படுத்தியுள்ளார்.

ஜனநாயககட்சியின் ஆளுநர்கள் காணப்படும் மூன்று மாநிலங்களான மிச்சிகன்,வேர்ஜினியா மினொசொட்டா ஆகியமாநிலங்களிலேயே முடக்கல் நிலைக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் டிரம்ப் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.
மினொசொட்டாவை விடுதலை செய்யுங்கள், மிச்சிகளை விடுதலை செய்யுங்கள்,வேர்ஜினியாவை விடுதலை செய்யுங்கள் என டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

முடக்கல் நிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இந்த மாநிலங்களில் இடம்பெற்றுவரும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள பெருமளவில் ஒன்று கூடுவதால் நோய் பரவக்கூடும், ஆர்ப்பாட்டக்காரர்களால் கொவிட் 19 நோய் பரவக்கூடும் என்ற அச்சத்தினை டிரம்ப் வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளார்.

இந்த மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுகின்றனர்,என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனநாயக கட்சியின் ஆளுநர்களையும் அவர் விமர்சித்துள்ளார்.
சில ஆளுநர்கள் கடுமையாக நடந்துகொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள