அமெரிக்காவை தாக்கிய ஐடா சூறாவளி தாக்கத்தால் குறைந்தது 46 பேர் உயிரிழப்பு!

You are currently viewing அமெரிக்காவை தாக்கிய ஐடா சூறாவளி தாக்கத்தால் குறைந்தது 46 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் ஐடா சூறாவளியுடன் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூயிசியானாவில் ஐடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது.

நியூயோர்க், லூயிசியானா, மிஸ்ஸிசிப்பிசி ஆகிய மாகாணங்களில் ஐடா சூறாவளி பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக ஐடா கருதப்படுகிறது.

நியூயோர்க் நகரின் ப்ரூள்ளின் மற்றும் குயின்ஸ் பகுதிகளில் பெரு வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும் வெள்ள பாதிப்புக்களை அடுத்து நியூயோர்க் நகரில் நேற்று முதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை, வெள்ளம் காரணமாக நியூயோர்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. நியூயோர்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments