அமெரிக்க அதிபருக்கு “கொரோனா” தொற்று உறுதி!

You are currently viewing அமெரிக்க அதிபருக்கு “கொரோனா” தொற்று உறுதி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மற்றும் அவரது மனைவியான மெலானியா இருவருக்கும் “கொரோனா” தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிபரின் நெருங்கிய ஆலோசகர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிபரும், அவரது மனைவியும் சோதிக்கப்பட்டதையடுத்தே இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

தொற்று ஏற்பட்ட ர்கள் வழமையாக 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதோடு, மேலதிக மருத்துவ தேவைகளை அதிபர் நாடவேண்டி ஏற்பட்டால், தன்போது நடைபெற்றுவரும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் அதிபர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுமெனவும், தேர்தலில் ட்ரம்ப் பின்னடைவை சந்திக்கலாமெனவும் எதிர்வுகள் கூறப்படுகின்றன.

“கொரோனா” பரவலை தடுப்பதில் மந்தமாகவே செயற்பட்டாரென அதிபர் ட்ரம்ப் கண்டனங்களுக்கு ஆளாகியிருந்த நிலையில், தனது ஆலோசகர் குழாமிலும் “கொரோனா” தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில் அதிபர் ஆர்வம் காட்டியிருக்பவில்லை எனவும் விசனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பகிர்ந்துகொள்ள