அமெரிக்க தடையை மீறும் இலங்கை – ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குகிறது!

You are currently viewing அமெரிக்க தடையை மீறும் இலங்கை – ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குகிறது!

அமெரிக்காவின் தடையை மீறி ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரவைகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை படையினர் பயன்படுத்தும் எம்.ஐ. 17 ரக போக்குவரத்து ஹெலிகொப்டர்கள், மிக் தாக்குதல் விமானங்கள், யுத்த டாங்கிகள் மற்றும் வேறு வகையான ஆயுத தளபாடங்கள் என்பவற்றுக்கான உதிரிப் பாகங்களை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் ரஷ்யாவிடமிருந்து இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்யக் கூடாது என அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள