அரசின் அவசரகால சட்டமூலத்துக்கு தடை போடும் நோர்வே எதிர்க்கட்சிகள்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing அரசின் அவசரகால சட்டமூலத்துக்கு தடை போடும் நோர்வே எதிர்க்கட்சிகள்! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” பரவலின் தாக்கத்துக்கு பின் ஏற்பட்டுள்ள நிலைமைகளையிட்டு, அவசரமுடிவுகளை எடுக்கவேண்டிய நிலைகள் வரும்போது, அவற்றை இலகுவாக்கும் பொருட்டு நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையாரால் முன்மொழியப்பட்ட அவசரகால விசேட சட்டமூலத்தின் பிரதான பகுதிகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்க்கட்சிகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையொன்றில் இன்று தெரிவித்துள்ளன.

அடிப்படை சட்டவிதிகளில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு மேலதிகமான அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் பிரதமரின் மேற்படி அவசர சட்டமூலமானது, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதன் பெரும்பகுதிகளுக்கு ஆதரவளித்த பிரதான எதிர்க்கட்சிகள், குறிப்பாக கல்வித்துறை சம்பந்தப்பட்ட அவசரகால சட்டமூலத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கல்வித்துறை தொடர்பாக பிரதமர் தெரிவித்துள்ள விளக்கங்கள் போதுமானதாக இல்லையென்றும், கல்வித்துறை தொடர்பில் இப்போது இருக்கும் சட்டவிதிகளை விடவும், மேலதிகமான மாற்றங்களை உத்தேச அவசர சட்டமூலத்தில் கொண்டுவருவதால், எதிர்காலத்தில் கல்வித்துறையிழும், பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நிச்சயமற்ற தன்மைகள் உருவாவதற்கு வழிவகுத்துவிடுமெனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பகிர்ந்துகொள்ள