அரசை ஏமாற்றினார்! நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்மீது குற்றச்சாட்டு!!

You are currently viewing அரசை ஏமாற்றினார்! நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்மீது குற்றச்சாட்டு!!

அரசுமுறை பயணம் அல்லது, அரசால் அனுமதிக்கப்பட்ட பயணங்களுக்கான செலவினங்களை அரசிடமிருந்து திரும்ப பெற்றுக்கொள்ளும் போது, முறையற்ற விதத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட பயண செலவினங்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்ததாக, நோர்வேயின் பெரும் கட்சியான “தொழிலாளர் கட்சி / Arbeiderpartiet / AP), “Rogaland” மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் “Hege Haukeland Liadal” மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் 73.000 குறோணர்கள் வரை பெறுமதியான போலி பயணச்செலவீனங்களுக்கான ஆவணங்களை இவர் சமர்ப்பித்துள்ளாரென குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதிலும், அதை மறுதலித்துள்ள மேற்படி அம்மையார், எனினும் இவ்வாறானதொரு நிலைமைக்கு தான் தள்ளப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக தெரிவித்துள்ளதோடு, மேற்படி விடயம் தொடர்பாக, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை தான் திருப்பி செலுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2016 ஆன் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டுவரை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக போலியாக தயாரித்து அரசுக்கு வழங்கப்பட்ட மேற்படி ஆவணங்கள் தொடர்பாக 2019 ஆம் ஆண்டில் காவல்துறை விசாரணைகளை தொடங்கியிருந்தது என்றாலும், தற்போதுவரை அம்மையார் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

மேற்படி விடயத்தை கட்சி மிக கடுமையான விடயமாக பார்ப்பதாக தொழிலாளர் கட்சியின் பிரதித்தலைவரான “Hadija Tajik” தெரிவித்துள்ளார்.

மூலம்:

https://www.nrk.no/rogaland/hege-haukeland-liadal-siktet-for-grovt-bedrageri-1.15243372

பகிர்ந்துகொள்ள