அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சீல்!

You are currently viewing அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சீல்!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நேற்று நடந்த அதே சமயத்தில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் உண்டானது. ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென முறையீடு செய்துள்ளனர். மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments