ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எங்களை கொன்றாலும் பரவாயில்லை உயிரைக் கொடுத்தாவது போராடுவோம்!

You are currently viewing ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எங்களை கொன்றாலும் பரவாயில்லை உயிரைக் கொடுத்தாவது போராடுவோம்!

கடந்து வந்த அரசாங்கங்களாலும் ஆட்சியாளர்களாலும் தமிழர் தேசத்தின் மீது திட்டமிட்டு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு” தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் உரையாற்றிய அவர், “இந்தத் தடைகள் காரணமாக ஊட்டச்சத்து பொருட்களை இலங்கையின் தலைநகரிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை காணப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகையிலே கிட்டத்தட்ட 70 வீதமான நிலப்பரப்புகள் இருந்தது. இந்தப் பிரதேசத்திற்குள் வாழ்ந்த மக்களுக்கு தெரியும் அவர்களுக்கு தேவையான போசாக்கான பொருட்களை எடுத்துச் செல்வதற்கு எவ்வளவு சிரமமான நிலை இருந்தது.

பொருளாதார தடைகளின் மூலம் விவசாய உள்ளீடுகளும் குறித்த பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது.

எங்களுடைய தேசத்திலேயே, பொன் விளைகின்ற பூமியிலே நாங்கள் விவசாய நடவடிக்கைகளை கூட உரிய முறையில் முன்னெடுக்க முடியாத வகையிலே, கடந்து வந்த அரசாங்கங்களின் ஒடுக்கு முறைகள் எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.

நாங்கள் சிறுவர்களாக இருந்த காலப்பகுதியிலே அந்த நெருக்கடிகளை நாங்கள் எதிர் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் தமிழர் தேசத்தை ஆட்சி செய்த எங்களுடைய காவலர்களாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தீர்க்கதரிசனமான முற்போக்கான செயற்பாடுகள் காரணமாக அந்த போசாக்கு குறைபாடுகள் அவ்வளவாக இருந்ததில்லை.

எங்களுடைய தேசத்திலே எங்களை காக்கக்கூடிய வகையிலே முன்மாதிரியான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதனை நான் இந்த இடத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூற விரும்புகிறேன்.

இது ஒரு புறமிருக்க இன்று காலை உரையாற்றிய ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இனவாதம் மிக்க கருத்துக்களை விதைத்துச் சென்றிருக்கிறார்.

முல்லைத்தீவு – குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் பொய்யான வரலாற்றை கூறிச்சென்றிருக்கிறார். நாட்டின் வர்த்தமானியிண் படி, இது ஒரு தொல்லியல் சார்ந்த இடமே. ஆனால், இந்த இனவாதி சொல்கிறார் 2000 வருடம் பழமையான பௌத்த இடமென்று.

இந்த ஆக்கிரமிப்பை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். உயிர் கொடுத்தாவது, நாங்கள் தடுப்போம். எங்களை நீங்கள் கொன்றாலும் பரவாயில்லை. அதை எதிர்த்து நாங்கள் ஜனநாயக வழியில் போராடுவோம்” என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments